வாழ்க்கை சுமை மற்றும் எரிபொருள் விலை, அத்தியவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பூண்டுலோயா நகரில் இன்று (24.12.2021) போராட்டம் நடைபெற்றது.

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் கபில பண்டார தலைமையில் நடைபெற்ற இப்போராட்டம் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
” வாழ்க்கைச்சுமை அதிகரித்துள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிவாரணம் வழங்கவேண்டிய அரசாங்கம், மாறாக பொருட்களின் விலைகளை அதிகரித்து வருகின்றது. இதனை எம்மால் ஏற்கமுடியாது. ஆகவே, பொருட்கள், சேவைகளின் விலைகள் உடன் குறைக்கப்படவேண்டும்.” – என்று போராட்டக்காரர்கள் கோஷமெழுப்பினர்.

பூண்டுலோயா நகரில் உள்ள மைதானத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பிக்கப்பட்டு நகரின் ஊடாக பூண்டுலோயா பஸ் தரிப்பிடம் வரை சென்று அங்கு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
க.கிஷாந்தன்



