டயகமவில் பேராபத்தை ஏற்படுத்திய ஆற்றை அகலப்படுத்தவும் மரங்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை.

0
184
அக்கரப்பத்தனை பிரதேச சபைக்குட்பட்ட டயகம நட்போன் தோட்டத்தில் இடம்பெற்ற நீர் இடியால் 20 ஏக்கர் சர்வநாசமாகியதோடு 60 குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகினர்.
இந்நிலையில் சம்பவமிடத்திற்கு விரைந்து சென்ற இ.தொ.காவின் உபத்தலைவரும்  முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான பழனி சக்திவேல் குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்டதோடு நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர்,அனர்த்தம் ஏற்பட்ட தோட்டத்தின் கிராமேசேவகர்,தோட்ட நிர்வாகத்தோடு கலந்துறையாடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆற்றை அகலப்படுத்தவும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்ற மரங்களை வெட்டி அகற்றவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here