டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம வெஸ்ட் 3ம் பிரிவு தோட்டத்தில் உள்ள வழிப்பிள்ளையார்
ஆலயம் 23 ம் திகதி இரவு இனம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு உண்டியல் திருடப்பட்டுள்ளது.
இதே தோட்டத்தில் உள்ள சலூன் கதவுகள் உடைக்கப்பட்டு 20 ஆயிரம் ரூபாய் பெருமதியான சிகை அலங்காரம் செய்யும் மெஷின்கள் திருடப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர் . டயகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஆலயத்தில் திருடப்பட்ட உண்டியலிருந்து பணத்தினை பெற்றுக்கொண்டு உண்டியலை தேயிலை மலையில் விட்டுசென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணையை டயகம பொலி ஸார் மேற்கொண்வருகின்றனர் இது வரை எவரும் கைதுசெய்ப்படவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கரப்பத்தனை நிருபர்.