டயகம பிரதேசத்தில் நேற்று இரவு ஏற்பட்ட கடும் மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் டயகம பிரதேச அமைப்பாளர்களான விஜயகுமார் மற்றும் கிறிஸ்டோபர் ஆகியோர் பார்வையிட்டனர்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில் வாகனம் உதயகுமார் ஆகியோரின் பணிபுரைக்கிணங்க பாதிக்கப்பட்ட பிரதேசங்களை தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதேச அமைப்பாளர்கள் பார்வையிட்டனர்.
டயகம ஈஸ்ட், டயகம வெஸ்ட் தோட்டப் பகுதிகளில் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளும் விவசாய நிலங்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்தப் பாதிப்புகள் குறித்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் மற்றும் பிரதி தலைவர் ஆகியோரின் கவனத்திற்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் டயகம பிரதேச அமைப்பாளர்கள்
கொண்டு வந்துள்ளனர்.