டயகம போடைஸ் வீதி மத்தியமாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைப்பு

0
187

ஹட்டன் போடைஸ் ஊடான டயகம வீதியானது போடைஸ் தொடக்கம் மன்றாசி வரையான குறுக்கு வீதி பொருந்தோட்டத்திற்குட்பட்ட வீதியாகவே இத்தனை காலம் காணப்பட்டது.இவ்வீதியானது நுவரெலிய பிரதேச செயலகத்திற்கும் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கும் உட்பட்டு காணப்பட்ட நிலையில் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கோ வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கோ உட்படாத நிலையில் இவ்வீதியில் அனர்த்தங்கள் ஏற்படும் போது புணரமைப்புகள் செய்வதில் சிக்கல் நிலை தோன்றும்.

இது தொடர்பாக பேருந்து உரிமையாளர்கள் இ.தொ.கா பொதுச்செயலாளரும் தலைவருமான கௌரவ. ஆறுமுகன் தொண்டமான் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் கௌரவ.கனபதி கனகராஜ் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுசென்றதை தொடர்த்து கௌரவ. ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் பணிப்புரைக்கு அமைய மத்திய மாகாண சபை இ.தொ.கா உறுப்பினர்களின் பரிந்துரைக்கு அமைய போடைஸ் டயகம வீதி மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் இணைப்பதற்கான நடவடிக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அரச வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளிவர உள்ளது.

இனிவரும் காலங்களிள் இவ்வீதி மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் உள்வாங்கப்படுவதோடு இனி வீதி அபிவிருத்திகள்,புணரமைப்புகளை மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையூடாக மேற்கொள்ள இலகுவானதாக அமையும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் கௌரவ.கனபதி கனகராஜ் தெரிவித்தார்.

குலசேகர் லீபன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here