டிக்கோயா கிழங்கன் தோட்ட காணிவிவகாரம் குறித்து அம்பகமுவ பிரதேச அபிவிருத்தி கூழு கூட்டத்தில் அமைதியின்மை – குரல் பதிவு இணைக்கப்பட்டுள்ளது!!

0
240

அம்பகமுவ பிரதேச அபிவிருத்தி கூழு கூட்டம் 13.08.2018.திங்கள் கிழமை இடம் பெற்றபோது அம்பகமுவ பிரதேச கூழுதலைவரும் அம்பகமுவ பிரதேசசெயலாளர் ஆர்.பி.டி.சுமனசேகர மற்றும் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் உபதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் ஆகியோருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டது.

பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் டிக்கோயா கிழங்கன் தோட்டபகுதியில் உள்ள காணிகளை வெளியாருக்கு விற்பனை செய்தமை தொடர்பில் 13.08.2018.திங்கள் கிழமை இடம் பெற்ற அம்பகமு பிரதேச அபிவிருத்தி கூழு கூட்டத்தில் வாதிபிரதிவாதங்கள் இடம் பெற்றன.

இதன் போது கிழங்கன் பகுதியில் உள்ள காணிகளை வெளியாருக்கு குறித்த பகுதிக்கு பொறுப்பான கிராமஉத்தியோகத்தர் ஊடாக விற்பனை செய்யபட்டு வருவதாக எமக்கு முறைபாடு கிடைத்துள்ளமை தொடர்பில் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதிராஜ் அம்பகமுவ பிரதேச செயலாளர் ஆர்.பி.டி.சுமனசேகரவிடம் கேள்வி எழுப்பினார்.

இதன் போது அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளை இவ்வாறு அம்பகமு பிரதேச செயலாளர் விற்பனை செய்து வருவதாக முன்வைத்த குற்றச்சாற்றுக்கு அமையவே மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜிக்கும் அம்பகமுவ பிரதேச செயலாளர் ஆர்.பி.டி சுமனசேகர ஆகிய இருவருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இந்த குற்றச்சாற்றினை மறுத்த அம்பகமுவ பிரதேச செயலாளர் ஆர்.டி.பி.சுமனசேகர நான் யாருக்கும் இந்த காணிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்யவில்லை அண்மையில் மண்சரிவினால் பாதிக்கபட்ட ஹட்டன் சமனலகம பகுதியில் உள்ள மக்களுக்கு வழங்குவதற்கே இந்த இடத்தினை நாங்கள் வழங்கியதாக அம்பகமுவ பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

எது எவ்வாறாக இருந்தாலும் வெளியார்களுக்கு குறித்த காணிகளை விற்பனை செய்ய நாங்கள் இடம் அளிக்கமாட்டோம் எனவும் தெரிவித்த மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தமைக்கு அவ்வாறு காணிகள் விற்கபடுமாயின் இது போன்ற செயற்பாடுகளுக்கு நாங்களும் எதிர்பினை வெளியிடுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதகிருஸ்ணன் குறிப்பிட்டார்.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here