டிக்கோயா – டிலரி மேற்பிரிவு தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 27.07.2018 அன்று மாலை குறித்த தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.தங்களுக்கு தோட்ட நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட காணி முறைமை வேண்டாம், வழமையாக மேற்கெள்ளப்பட்ட தொழில் முறைமையே வேண்டும் என தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
மலையக தோட்ட தொழிலாளியை ஏமாற்றதே, வறுமையில் இருக்கும் எங்களை மீண்டும் ஒரு புதுமுறையை ஆரம்பித்து (காணி முறை) அடிமையாக்காதே, காணிக்கு போனா எட்வான்ஸ் பணம், நிறைபடி போனா எட்வான்ஸ் பணம் இல்லை இது நியாயமா ? என பல வசனங்கள் பொறிக்கப்பட்ட சுலோகங்களை ஏந்தி எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
சுமார் 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணித்தியாலயம் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.
(க.கிஷாந்தன்)