டிக்கோயா நுண்கலைக் கல்லூரியில் ஆங்கில மொழிமூல வகுப்புக்கள் ஆரம்பம்.

0
227

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட டிக்கோயா நுண்கலை கல்லூரியில் இவ்வருடம் முதல் ஆங்கில மொழி மூல வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜ் தெரிவித்தார்.
குறித்த பாடசாலையில் தரம் ஆறு முதல் ஆங்கில மொழிமூலம் வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு ஹட்டன் கல்வி வலயம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அதனை தொடர்ந்து தற்போது தரம் ஆறு முதல் ஆங்கில மொழி மூலம் கற்பதற்காக மாணவர்கள் சேர்த்து கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்;.

ஹட்டன் பகுதியில் அரச பாடசாலைகளில் ஆங்கில மொழிமூலம் மாணவர்கள் கற்பதற்கான வாய்ப்பு குறைவாகக் காணப்படுவதனால் பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் தனியார் பாடசாலைகளை நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது உள்ள பொருளாதார நெருக்கடியில் பிள்ளைகளின் கல்வியினை கொண்டு செல்வது மிகவும் கடினமாக காணப்படுவதனால் அரச பாடசாலைகளில் ஆங்கில மொழிமூலம் கற்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமையவே தற்போது டிக்கோயா நுண்கலைக் கல்லூரியில் ஆங்கில மொழிமூல வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here