இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக டிக்கோயா போடைஸ் தோட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 50 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 16-07-2018 ஆம் திகதியன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் இந்தய உயர் ஸ்தானிகர் தரஞ்சித்; சந்துசிங் சார்பில் அபிவிருத்தி ஆலோசகர் டி.சி. மஞ்சுநாத் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டார்கள்.
அவர்களோடு மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் சோ. ஸ்ரீதரன், சிங். பொன்னையா, ‘டஸ்ட்’ நிறுவனத்தின் தலைவர் வீ. புத்திரசிகாமணி, சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பிலிப், தேசிய அமைப்பாளர் ஜி. நகுலேஸ்வரன் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டார்கள்.