டிக்கோயாவுக்கும் கிளங்கன் பகுதிக்கு இடையில் காசல்ரி நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் மிகவும் ரம்யமான சூழலில் அமைந்துள்ள, ஹோர்லி தோட்ட மக்கள் பாலர் பாடசாலை மற்றும் சனசமூக நிலையம் ஒன்றினை அமைத்து தருமாறு நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி அவர்களிடம் வைத்த கோரிக்கைக்கு அமைய சுமார் 15 லட்சம் ரூபா செலவில் சனசமூக நிலையம் ஒன்றினை அமைத்து கொடுத்துள்ளதாக, பொது மக்கள் அரசாங்கத்திற்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸிக்கும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றனர்.
குறித்த தோட்டத்தில் சுமார் 100 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தேவைகருதி கூடுவதற்கு பொதுவான ஒரு இடம் இருக்கவில்லை அத்தோடு இவர்களின் பிள்ளைகள் ஆரம்ப கல்வியினை பெறுவதற்கு தேவையான போதியளவு வசதிகளை கொண்ட கட்டடம் ஒன்று இல்லாததன் காரணமாக இங்கு வாழும் குடும்பங்களின் பிள்ளைகள் பாலர் கல்வியினை தொடர டிக்கோயாவுக்கோ ஹட்டனுக்கோ அல்லது நோர்வூட் பிரதேசத்திற்கோ செல்ல வேண்டிய நிலையே காணப்பட்டன.
பொருளாதார நெருக்கடியில் வாழும் தோட்டத்தொழிலாளர்கள் இவ்வாறு தூர பிரதேசங்களுக்கு தமது பிள்ளைகளை அனுப்புவது மிகவும் கஸட்டமான விடயம் என்பதனால் தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த கட்டடத்தினை பாலர் பாடசாலையாக பிரதேச மக்கள் ஒன்றுகூடும் இடமாகவும் பயன்படுத்தப்பட முடியும் ஆகவே இந்த கட்டடம் உருவாக்கி தந்தமைக்காக அரசாங்கத்திற்கும் ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி அவர்களுக்கும் நன்றிகளையும் பாராட்டக்களையும் தெரிவித்தனர்.
இந்த கட்டடம் நோர்வூட் பிரதேசசபையின் தலைவர் கே.கே.ரவி அவர்களின் வேண்டுகோளுக்குமைய ராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கே.சுந்தரலிங்கம்.