டிசம்பரில் ஆரம்பமாகும் காந்தாரா 2 படத்தின் படப்பிடிப்பு

0
156

பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ள இந்தப் படத்தின் பட்ஜெட் 100 கோடி ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது. காந்தாரா 2 படத்தின் பூஜை நவம்பர் 27ம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ள இந்தப் படத்தின் பட்ஜெட் 100 கோடி ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த காந்தாரா படத்தின் முன் வரலாற்றை கூறும்வகையில் காந்தாரா 2 உருவாக்கப்பட உள்ளதாகவும் படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்திற்காக அதிகமான அளவில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு ரிஷப் ஷெட்டி கதைக்களத்தை உருவாக்கியுள்ளதாகவும் படம் 300 – 400 ஆண்டுகளின் காலக்கட்டத்தையொட்டி உருவாக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மழைக்காலத்தையொட்டிய கதைக்களம் என்பதால் ஒகஸ்ட் மாத இறுதியில் திட்டமிடப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here