மலையகத்தமிழர்கள் இலங்கைக்கு வருகைத்தந்து 200 வருடம் நிறைவடைந்துள்ளது.இந்நிகழ்வை எதிர்வரும் டிசம்பர் மாதம் 24ம் திகதி நுவரெலியாவில் கொண்டாட தீர்மாணித்துள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் மலையகத்தமிழர்கள் மலையகத்தை நோக்கி வருகைத்தந்து 200 வருடத்தை நிறைவு செய்துள்ளனர்.அவ் 200வருடத்தில் மலையகத்தில் அடைட்துள்ள அபிவிருத்தி மலையகத்தில் உருவாகியுள்ள சாதனையாளர்கள் உட்பட மலையகத்துகாக பாடுபட்டவர்கள் என ஒவ்வொரு துறைசார்ந்தும் கௌரவிக்கப்படவுள்ளனர்.என தெரிவித்தார்.
200 வருடத்தில் மலையகம் எத்தனையெத்தனை சாதனையுகளையும் எத்தனையெத்தனை சாதனையாளர்களையும் உருவாக்கியுள்ளது எற்பதை எதிர்வரும் டிசம்பர் 24ம் திகதி நுவரெலியாவில் பார்க்க முடியும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்