‘டியூட்’ படத்தில் இளையராஜா பாடல்கள் வழக்கு தொடர உயர் நீதிமன்றம் அனுமதி!

0
2

‘டியூட்’ படத்​தில் இளை​ய​ராஜா​வின் பாடல்​களை அனு​ம​தி​யின்றி பயன்​படுத்​தி​யிருப்​பது தொடர்​பாக, தனி​யாக வழக்கு தொடரலாம் என இளை​ய​ராஜாவுக்கு உயர் நீதி​மன்​றம் அனு​ம​தி​யளித்​துள்​ளது.

பதிப்​புரிமை பெற்ற தனது பாடல்​களைப் பயன்​படுத்தி தனிப்​பட்ட முறை​யில் அதிக வரு​வாய் ஈட்டி வரு​வ​தாகக் கூறி சோனி மியூசிக், எக்கோ ரெக்​கார்​டிங், அமெரிக்​கா​வில் உள்ள ஓரியண்​டல் ரெக்​கார்ட்ஸ் ஆகிய நிறு​வனங்​களுக்கு எதி​ராக இசையமைப்​பாளர் இளை​ய​ராஜா சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கை ஏற்​கெனவே விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், இளை​ய​ராஜா இசையமைத்த பாடல்​களை வணிக ரீதி​யாக பயன்​படுத்தி ஈட்​டிய வரு​மானம் குறித்த விவரங்​களை தாக்​கல் செய்ய, சோனி நிறு​வனத்​துக்கு உத்​தர​விட்​டிருந்​தது. இந்​நிலை​யில் இந்த வழக்கு நீதிபதி என்​.செந்​தில்​கு​மார் முன்பு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது இளை​ய​ராஜா தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் ஏ.சர​வணன், இந்த வழக்​கில் சோனி நிறு​வனம் இன்​னும் பதில்​மனு தாக்​கல் செய்​ய​வில்லை என்​றும், தற்​போது வெளி​யாகி​யுள்ள ‘டியூட்’ படத்​தி​லும் இளை​ய​ராஜா​வின் 2 பாடல்​களை அனு​ம​தி​யின்றி பயன்​படுத்தி உள்​ளனர் என்​றும் கூறி​னார்.

சோனி நிறு​வனம் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் விஜய் நாராயண், இளை​ய​ராஜா​வின் பாடல்​கள் மூலம் ஈட்​டிய வரு​வாய் குறித்த விவரங்​களை சீலிடப்​பட்ட கவரில் தாக்​கல் செய்​தார். இந்த வழக்​கில் பதில்​மனு தாக்​கல் செய்ய தயா​ராக இருப்​ப​தாக​வும் தெரி​வித்​தார்.

மேலும் இளை​ய​ராஜா​வின் 500-க்​கும் மேற்​பட்ட பாடல்​களுக்கு பதிப்​புரிமை பெற்​றது தொடர்​பான வழக்கை சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் இருந்து மும்​பைக்கு மாற்​றக்​கோரு​வது தொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தில் சோனி நிறு​வனம் தொடர்ந்த வழக்​கில், இளை​ய​ராஜா பதிலளிக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது என்​றார்.

இரு தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி என்​.செந்​தில்​கு​மார், வரு​மானம் குறித்த விவரங்​களை சீலிட்ட கவரில் தாக்​கல் செய்​யக்​கூ​டாது என உச்ச நீதி​மன்​றம் ஏற்​கெனவே உத்​தர​விட்​டுள்​ள​தாகக்​கூறி சோனி நிறு​வனம் தாக்​கல் செய்த வரு​மான விவரங்​களைத் திருப்​பிக் கொடுத்​தார். மேலும், ‘டியூட்’ படத்​தில் தனது பாடல்​களைப் பயன்​படுத்​தி​யிருப்​பது தொடர்​பாக இளை​ய​ராஜா தனி​யாக வழக்கு தொடரலாம் என அனு​ம​தி யளித்தார். மேலும் சோனி நிறு​வனம் தொடர்ந்​துள்ள வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருப்​ப​தாகக்​கூறி, இந்த வழக்கு விசா​ரணையை நவ.19-க்கு தள்ளி வைத்​துள்​ளார்.

HinduTmail

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here