பங்களாதேஷ் அணியை, இலங்கை அணி இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரிலும் தோற்கடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு இலங்கை இரசிகர்களுக்கு மத்தியில் எழுந்துள்ளது.
ஏற்கனவே பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களை இலங்கை அணி கைப்பற்றியதை அடுத்தே இந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தநிலையில், இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள குறித்த போட்டி நாளை இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
முன்னதாக 2 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2 அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றிகளைப் பெற்றுள்ளன.
இந்தநிலையில் நாளை நடைபெறவுள்ள போட்டி, தொடரைத் தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளது.