பிக் பாஸின் முந்தைய சீசன்களைப் போல இல்லாமல் வழக்கத்திற்கு மாறாக 18 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த சீசனில் முதலாவது ஆளாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார் திருநங்கை நமீதா மாரிமுத்து. அவர் முறைப்படி எவிக்ஷனில் வெளியேறவில்லை. தவிர்க்க முடியாத காரணம் என்று மட்டுமே சொல்லப்பட்டது.
இந்நிலையில் இந்த வார எவிக்ஷனுக்கான நாமினேஷன் பட்டியலிலும் பலர் இருந்த சூழலில் வார இறுதி எபிசோடுக்கான ஷூட்டிங் இன்று காலை தொடங்கியது. கமல் கலந்துகொண்ட இந்த ஷூட்டிங்கில் எவிக்ஷனுக்கான நேரம் வந்தபோது மக்களின் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட வேண்டிய இருவராக அபிஷேக் ராஜாவும் நாட்டுப்புறப் பாடகி சின்னப் பொண்ணுவும் இருந்தனர்.
ஆனால், கடந்த வாரம் நிகழ்ந்த ஒரு நாணய டாஸ்க் மூலம் சின்னப் பொண்ணு கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட, அபிஷேக் எவிக்ட்டாகி உள்ளார். பிக் பாஸ் வீட்டில் சண்டை, சச்சரவுகள் என ஒரு ரவுண்டு வந்த அபிஷேக் மக்களின் வாக்குகள் அடிப்படையில் வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.