டைட்டானிக்கை போல் திரைப்படமாகும் டைட்டன் நீர்மூழ்கி விபத்து!

0
145

கடலுக்குள் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக சென்ற டைட்டன் நீர்மூழ்கி கப்பல் விபத்து சம்பவத்தை வைத்து திரைப்படமொன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த கப்பல் விபத்துடன், காதல் கதையை இணைத்து இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் எடுத்த டைட்டானிக் படம் உலகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்றது.

1912 ஆம் ஆண்டு கடலுக்குள் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக 2023 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட டைட்டன் நீர்மூழ்கி கப்பலும் கடந்த ஜூன் மாதம் விபத்தில் கடலுக்குள் மூழ்கியது.

அதையடுத்து டைட்டானிக் போலவே, டைட்டன் விபத்தை வைத்தும் ஜேம்ஸ் கேமரூன் படமெடுக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானதை அடுத்து இதனை ஜேம்ஸ் கேமரூன் மறுத்துள்ளார்.இந்நிலையில், மைண்ட் ரியாட் எண்டெர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் டைட்டன் நீர்மூழ்கி விபத்து சம்பவத்தை வைத்து படமெடுக்கப் போவதாக அறிவித்துள்ளது.

சால்வேஜ்ட் என பெயரிடப்பட்ட இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here