டொ​வினோ தாமஸ் படக்​குழு​வுக்கு அபராதம்!

0
23

டொவினோ தாமஸ், கயாது லோஹர் நடிக்​கும் படம் ‘பள்ளிச்சட்டம்​பி’. டிஜோ ஜோஸ் ஆண்​டனி இயக்​கி​யுள்ள இப்படத்தின் கதை 1950– 60களில் நடப்​பது போல அமைக்கப்பட்டுள்​ளது.

வேர்ல்ட் வைட் ஃபிலிம்ஸ் சார்​பில் நவுஃபல் மற்​றும் பிரிஜீஷ், சிக்யூப் ப்ரோஸ் என்​டர்​டெ​யின்​மென்ட்ஸ் சார்​பில் சாணக்​கியா சைதன்யா சரண் ஆகியோர் தயாரிக்​கின்​றனர். இதில் டொவினோ தாமஸ் புதிய தோற்​றத்​தில் நடிக்​கிறார்.

மலை​யாளத்​தில் உரு​வாகும் இப்​படம் தமிழ், தெலுங்​கு, இந்​தி, கன்​னடம் என 5 மொழிகளில் ஏப்.9ல் வெளி​யாக உள்​ளது. இந்​நிலை​யில் இதன் படப்​பிடிப்பு கேரள மாநிலம் இடுக்​கி​யில் உள்ள மலங்கரா நீர்த்​தேக்​கம் அருகே நடந்​தது. படப்​பிடிப்பு முடிவடைந்ததும் செட் அமைக்​கப் பயன்​படுத்​தப்​பட்ட பொருட்களை அங்​கேயே கொட்​டி​விட்​டுப் படக்​குழு​வினர் சென்றுவிட்​டனர்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரை அடுத்து ‘பள்​ளிச்​சட்​டம்​பி’ படக்​குழு​வுக்​கு, இடுக்கி குடா​யத்​தூர் பஞ்​சா​யத்து ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்​தது. இதையடுத்து ஜேசிபி மூலம் அங்கு கொட்டப்பட்ட குப்​பைகளைப் படக்​குழு​வினர்​ அப்புறப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here