அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரிக் குறைப்பு மசோதா பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்க காங்கிரஸில் நேற்று (3) நிறைவேற்றப்பட்டது.
வரிச் சலுகைகள், எல்லைப் பாதுகாப்பு, செலவீனங்கள் குறைப்பு, சட்டவிரோதமாகக் குடியேறுவதைத் தவிர்க்க 350 பில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு செய்வது போன்ற அம்சங்கள் நிறைந்த செலவு குறைப்பு மசோதா (One Big Beautiful Bill) அமெரிக்க காங்கிரஸில் நேற்று (3) விவாதங்களுக்கு பிறகு நிறைவேற்றப்பட்டது.
ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக 218 வாக்குகளும் எதிராக 214 வாக்குகளும் கிடைத்தன. 4 வாக்குகள் வித்தியாசத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க காங்கிரஸில் நிறைவேற்றப்பட்ட மசோதா அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு கையெழுத்திடவுள்ளார்.
இந்த மசோதாவுக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.