தங்கத்தின் விலையில் தொடரும் மாற்றம்!

0
10

இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது நேற்று (11) தங்கத்தின் விலை சுமார் ரூ. 5,000 வரை அதிகரித்துள்ளது.

இதற்கமைய, புறக்கோட்டை தங்க விற்பனை சந்தையில் 22 கரட் தங்கத்தின் விலை ரூ. 310,000 ஆக அதிகரித்துள்ளது.

சந்தை தரவுகளின்படி, நேற்று முன் தினம் (10) தங்கத்தின் விலை ரூ. 305,300 ஆக இருந்தது.

இதற்கிடையில், வெள்ளிக்கிழமை ரூ. 330,000 ஆக இருந்த 24 கரட் தங்கத்தின் விலை ரூ. 335,000 ஆக அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்து வரும் சூழலில் தாய்லாந்து வியட்நாம் போன்ற பல நாடுகளில் உள்ள மக்கள் தங்கத்தை கொள்வனவு செய்ய வரிசையில் நிற்பதாக செய்திகள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here