மலையகம் முழுவதும் தடுப்பூசிகள் கட்டம் கட்டமாக ஏற்றப்பட்டு வருகின்றன.இதன்போது தடுப்பூசிகளை ஏற்றிய மறுநாள் தோட்டத்தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டுமென மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் தோட்டக்கம்பனிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் தடுப்பூசி ஏற்றிய பின்னர் தோட்டத்தொழிலாளர்கள் வேலைக்கு செல்கின்றனர்.அதோடு இது மழைக்காலம் என்பதால் மழையில் நனைய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.தடுப்பூசி ஏற்றிய பின் குளிக்க கூடாதென வைத்தியர்கள் அறிவுறுத்துகின்ற இந்நேரத்தில் மழையில் நனைந்து கொண்டு தொழிலில் ஈடுபடுவதால் ஏதாவது அசம்பாவிதம் நிகழக்கூடும் எனவே தடுப்பூசி ஏற்றிய தோட்டத்தொழிலாளர்களுக்கு தடுப்பூசிய மறுநாள் விடுமுறை வழங்க வேண்டுமென கம்பனிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
நீலமேகம் பிரசாந்த்