ரஷ்யா உக்ரைன் படைகளுக்கு எதிராக தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுவதை விசாரிக்குமாறு ஹேக்கில் உள்ள உலகளாவிய இரசாயன ஆயுத கண்காணிப்பு அமைப்பிடம் உக்ரைன் நேற்று (8) கேட்டுக் கொண்டது.
இரசாயன ஆயுதங்களைத் தடை செய்வதற்கான அமைப்பின் (OPCW) நிர்வாகக் குழுவிடம் விசாரணையை நிறுவுவதற்கான கோரிக்கையை கியேவ் சமர்ப்பித்தது.
டச்சு மற்றும் ஜேர்மன் உளவுத்துறை நிறுவனங்கள் கடந்த வெள்ளிக்கிழமை (4) ரஷ்யா முன்னணியில் சட்டவிரோத ஆயுதங்களைப் பரவலாகப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து உக்ரைன் உலகளாவிய இரசாயன ஆயுத கண்காணிப்பு அமைப்பிடம் விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.