புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்துலுஓயா பகுதியிலுள்ள இறால் பண்ணையொன்றின் தண்ணீர் தொட்டியில் விழுந்து 24 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின் முதற்கட்ட விசாரணையில் குறித்த இளைஞனுக்கு ஏற்பட்ட வலிப்பின் காரணமாக தண்ணீர் தொட்டியில் விழுந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.