தந்தையின் கண் ஒன்றை தோண்டி சிதைத்துள்ள மகன்- வாழைச்சேனையில் கொடூரம்

0
237

தந்தையின் கண் ஒன்றை அவரது மகன் தனது கை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தியாவட்டவான் பாடசாலை வீதியிலேயே இச்சம்பவம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணாமாக 67 வயதுடைய தந்தையை கடுமையான முறையில் தாக்கியதன் பின்னர் அவரது 19 வயதுடைய மகன் கண்ணை தோண்டி சிதைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்துக்கு போதைவஸ்துப் பாவனையே காரணமாக அமைந்துள்ளது என்று பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்வாறு கண் சிதைவடைந்து வெளியில் வந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார். சந்தேக நபரான மகனை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here