தந்தையின் சித்திரவதை தாங்காது காட்டுக்குள் ஓடிய மகள்!

0
62

தனது தாய் வெளிநாட்டில் இருந்தபோது, தந்தை சித்திரவதை செய்ததால் வீட்டை விட்டு காட்டுக்கு ஓடிய 14 வயது பாடசாலை மாணவியை கண்டுபிடித்துள்ளதாக ஹதரலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.

14 மற்றும் 8 வயதுடைய இரண்டு மகள்களும், அதே பொலிஸ் எல்லைக்குள் வரும் கஹபத்வலவின் கோனதென்ன பகுதியில், தங்கள் 36 வயதுடைய தந்தையுடன் வசித்து வந்துள்ளனர்.

 தந்தையின் சித்திரவதை காரணமாக, மூத்த மகள் கடந்த 16 ஆம் திகதி காலை வீட்டை விட்டு வெளியேறி, தனது பாடசாலை பையில் தனது துணிகளை வைத்து எடுத்து சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலைக்குச் சென்ற மகள் மாலை வரை வீடு திரும்பவில்லை என்று ஹதரலியத்த பொலிஸில் தந்தை புகார் அளித்திருந்தார். உடனடியாக அவளைத் தேடிச் சென்ற பொலிஸார்,  நாள் முழுவதும் உண்ணாமல் இருந்ததால், அவள் ஒரு மரத்தடியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்ததைக் கண்ட பொலிஸார் அச்சிறுமியை மீட்டு அழைத்து வந்ததாக தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here