தனக்கான புதைகுழியை தானே தயார் செய்து வைத்திருந்த முன்னாள் பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாலித தேவப்பெரும. எப்போதும் மக்களோடு மக்களாகவே வாழ்ந்த தேவப்பெரும. தான் இறந்தபின்னர் தான் தயார் செய்து வைத்திருக்கும் புதைகுழியில் 24 மணித்தியாலத்துக்கு முன்னர் அடக்கம் செய்ய வேண்டும் என எழுதிவைத்துள்ளார். தனது வீட்டில் இரண்டு மின்சார கம்பிகளை இணைக்க முற்பட்டபோது மின்சாரம் தாக்கி மரணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.