தனது மனைவிக்கு மொட்டையடித்து தாக்கிய இலங்கை நபர் மென்சஸ்டரில் கைது !

0
153

இலங்கை நபர் ஒருவர் தனது மனைவிக்கு மொட்டையடித்து, அவரை இடுப்புப்பட்டியினால் தாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அத்தோடு இந் நபரை இங்கிலாந்தின் மென்சஸ்டரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

45 வயதான இந்த இலங்கையரும் அவரது மனைவியும் 2004ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர் இத் தம்பதியினர் 2007ஆம் ஆண்டு மென்சஸ்டரில் குடியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த காலம் தொட்டே குறித்த இலங்கையர் தமது மனைவியை கொடுமைப்படுத்தி வந்ததாக நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமது மனைவி தொழில் செய்து வந்தபோதும் இந் நபர் தொழில்களில் ஈடுபடவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தீய பழக்கங்களில் இருந்தும் மோசமான நண்பர்களிடம் இருந்தும் கணவரை காப்பாற்றும் முயற்சியின்போதே இலங்கைப் பெண், அவரது கணவரால் சித்திரவதைகளுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here