தனமல்வில, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கரமெட்டிய குளத்திற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் காட்டு யானையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த யானை இறப்பதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் சிகிச்சை பெற்று வந்தள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், யானை இறந்தமைக்கான காரணம் இன்னும் கண்டறிப்படவில்லை. இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.