ஹட்டன் மற்றும் பொகவந்தலா நோர்வூட் பொலிஸ் பிரதேசங்களுக்கு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்த பிரதேசங்கள் கடும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
இதற்கமைய ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட என்பீல்ட் நுழைவாயிலும், நோர்வூட் பொலிஸ் பிவுக்குட்பட்ட புளியாவத்தை மற்றும் வெஞ்சர் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய இந்த பிரதேசங்களில் அத்தியவசிய தேவைக்காக மாத்திரமே வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன் ஏனையவர்கள் திருப்பியனுப்பப்பட்டனர்.
இதே நேரம் சுகாதார பொறிமுறைகளை பின்பற்றாது சென்ற பலர் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டனர். எக்காரணம் கொண்டும் மிக அத்தியவசிய தேவைகளை தவிர்ந்து ஏனையவர்கள் தனிமைதப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலிருந்து வெளியேறக் கூடாது எனவும் அவ்வாறு சென்றால் அவர்கள் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் இதன் போது தெரிவித்தனர்.
கே.சுந்தரலிங்கம்