நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நேற்றையதினம் நடைபெற்ற கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் ஒக்டோபர் வரை நீடிக்கப்பட்டுள்ள இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் நீடிக்காமல் முதலாம் திகதியுடன் நீக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.