நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்தப்படவுள்ளதாக அரசரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துவரும் சூழ்நிலையில், கடுமையான சில சுகாதார கட்டுப்பாடுகளுடனேயே நாடு திறக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கான சுகாதார வழிகாட்டல்கள், கட்டுப்பாடுகள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், பொது போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டாலும், அதில் 25 வீதமானோரே பயணிக்க முடியும் என கூறப்படுகின்றது. சிலவேளை இந்த எண்ணிக்கை 50 வீதமாக அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.
அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பிலும் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.