பண்டாரவளையில் இருந்து எபரவ கிராமத்தை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று பண்டாரவளை தியத்தலாவ பிரதான வீதியில் கஹகொல்ல பகுதியில் 21.02.2018 அன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் திடீரென தீப்பற்றிக் கொண்டதில் 17 பேர் படுங்காயங்களுடன் தியத்தலாவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்தவர்களுள், 12 பேர் இராணுவ வீரர்களும், பெண்ணொருவரும் அடங்குகின்றனர்.
பஸ்ஸினுள் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் இந்த தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)