தனியார் யோகட் நிறுவனத்தின் கழிவு நீர் மற்றும் குப்பைகள் கொத்மலை ஓயா ஆற்றில் கலக்கபடுவதாக பிரதேச மக்கள் விசனம்!!

0
173

கொட்டகலை பிரதேசசபைக்குட்பட்ட போகாவத்தை நகர பகுதியில் இயங்கி வரும் தனியார் யோகட் நிறுவனத்தில் கழிவு பால் நீர் மற்றும் குப்பைகள் யோகட் நிறுவனத்தின் அருகாமையில் உள்ள கொத்மலைஓயாவில் கலக்கபடுவதால் கொத்மலை ஓயாவின் நீர் மாசடைவதாக பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்

குறித்த தனியார் யோகட் நிறுவனத்தினால் சேகரிக்கபடுகின்ற குப்பைகள் மற்றும் யோகட் கலந்த பால் நீர் நேரடியாக கால்வாய் ஒன்றின் ஊடாக கொத்மலை ஓயாவிற்க்கு கலக்கபடுவதாகவும் குறித்த நீரினை பொதுமக்கள் அன்றாட தேவைக்கு பயன்படுத்தி வருவதாகவும் பிரதேச மக்கள் மேலும் தெரிவித்தனர்

இதேவேலை கொத்மலை ஓயாவில் இந்த பால் கலந்த நீர் கலக்கபடுவதால் குறித்த நீரினை பயன்படத்தும் மக்கள் இந்த நீரில் பால் வாட வீசுவதாகவும் ஆகையால் இந்த நீரினை அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்த இயலாமையாக காணபடுவதாகவும் இம் மக்கள் தெரிவிக்கின்றனர்

இது குறித்து கொட்டகலை பிரதேசசபை கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கபடுவதோடு இனிவரும் காலங்களில் குறித்த கொத்மலை ஓயாவின் இந்த பால் கலந்த கழிவு நீரினையும் குப்பைகளை இடுவதை தடைசெய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

15 20 12 13 21

இது போன்ற செயலில் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் நீண்டகாலமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here