தனி மனித பொருளாதாரத்தினை மேம் படுத்தாது நாட்டை கட்டியெழுப்ப முடியாது என அருணலு மக்கள் முன்னணியின் தலைவர் டாக்டர் கே.ஆர் கிசான் தெரிவித்தார.; நேற்று 05 ம் திகதி இரவு ஹட்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் எமது நாடு பல்வேறு நெருக்கடிகளுக்கு உட்பட்டு இன்று புதிய ஆட்சி உருவாகியுள்ளது இந்த நாட்டில் பொருட்களை விலை குறைப்பதோ அல்லது சம்பளத்தினை போதுமான அளவு உயர்த்துவதோ முடியாத காரியம். காரணம் இன்று வரவு எட்டனா செலவு 16 அனா என போய் கொண்டிருக்கிறது இந்நிலையில் நாம் 2027 முதல் ஐஎம்எப் இடம் வாங்கிய கடனை செலுத்த வேண்டும் அப்படியென்றால் எமது நாடு மேலும் பல நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்.
எமது நாட்டில் ஆட்சி செய்த அரசியல் தலைவர்கள்; சரியான முறையில் திட்டமிட்டு பொருளாதாரத்தினை வளர்க்காததன் காரணமாகவே நாடு நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டது இதன் விளைவுகளை மக்கள் இன்றும் அனுபவித்து வருகிறார்கள்
இந் நிலையில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் சரியானவர்களையும்; திட்டமில்லாத எதனையும் சாதிக்க கூடிய வள்ளமையில்லாதவர்களை மீண்டும் தெரிவு செய்வார்களேயானால் நாடும் மீண்டும்; நெருக்கடிக்கு தள்ளப்படும் எனவே இம் முறை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் சரியான புது முகங்களை தெரிவு செய்ய வேண்டியது மக்களின் கடமையும் பொருப்புமாகும்.
அருணலு மக்கள் முன்னணியினை பொருத்த வரையில் நாட்டையும் பிரதேசத்தையும் முன்னேற்றுவதற்கு பல திட்டங்களை முன்வைத்துள்ளது எங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட அது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று எமது நாட்டில் உள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்கு ஊழியர்கள் இல்லாததனால் இன்று கொழும்பில் பல ஆடைத் தொழிச்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
ஊழியர்கள் இன்றுள்ள பொருளாதா நெருக்கடியில் கொழும்பில் சென்று தங்கியிருந்து இந்த தொழிலில் ஈடுபடுவதற்குரிய போதியளவு வருமானம் இல்;லை அவ்வாறு அவர்கள் கொழும்பு சென்று வேலை செய்தால் உழைக்கும் பணத்தினை வாடகைக்கும் சாப்பாட்டிக்கும் மாத்திரம் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகமானவர்கள் அந்த தொழிலை கைவிட்டுள்ளனர்.நாங்கள் இன்று அந்த உரிமையாளர்களிடம் பேசியிருக்கிறோம் அவர்களின் அந்த வேலையினை வீட்டிலிருந்தே செய்து கொடுத்து மாதம் 50 ஆயிரம் ஒரு லட்சம் வரை உழைப்பதற்கு ஏற்ற வகையில் வீட்டிலிருந்து முன்னெடுப்பதற்கு அதனால் அவர்களும் லாபம் அடையாளம் கம்பனிகளுக்கு ஈபிஎப்,நுPகு ஈடிஎப்,நுவுகு கட்ட தேவையில்லை இதனால் கம்பனிகளும் லாப அடையலாம்.
இரண்டாவதாக பதுளை மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் ஹல்தமுல்ல ஆளடிதெதன் பகுதியில் சுற்றுலா துறையினை முன்னேற்றுவதற்கு கேபில் கார் செயத்திட்டத்தினை முன்னெடுப்பதற்காக கடந்த 15 வருட காலமாக முயற்சி செய்த போதிலும் தற்போது வந்த புதிய அரசாங்கம் அதனை முன்னெடுப்பதற்கு இணக்கம் அதரிவித்துள்ளது இதன் மூலம் நான்கு மாவட்டங்களை சேர்ந்;த 30 ஆயிரம் பேர் இன மத மொழி பேதமின்றி வேலை வாய்ப்பினை பெறக்கூடிய நிலை காணப்படுகிறது.
அதே போன்று சீறுநீரக பாதிப்புக்களை குறைப்பதற்கு கணியுப்புக்கள் அடங்கிய நீரினை பெற்றுக்கொடுப்பதற்கு செயத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதே போன்று தோட்ட வைத்தியசாலைகளை நவீனமயப்படுத்தி தோட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கவும் மக்களுக்கு சிறந்த சேவையினை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.அதே போன்று மத குருமார்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கும் மரக்கறிகளை வெளிநாடுகளுக்கு நேரடியாக ஏற்றுமதிக்குரிய செயத்திட்டம் ஒன்றும் உள்ளதாகவும் மேலும் பல நல்ல செயத்திட்டங்களை செய்துவதற்கான வேலைத்திட்டங்கள் தங்களிடம் காணப்படுவதாகவும் இவற்றினை முன்னெடுப்பதற்கு மக்கள் ஆணை அருணலு மக்கள் முன்னணிக்கு இன்றியமையாத ஒன்றாக உள்ளதாகவும் எனவே மக்கள் செயத்திட்டங்கள் உள்ள அருணலு மக்கள் முன்னணியினை ஆதரிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
மலைவாஞ்ஞன்