இந்த படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் சுந்தர்.சி ரஜினியின் படத்தினை இயக்குவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அண்மையில் சுந்தர் சி ரஜினியின் படத்தை இயக்குவதில் இருந்து விலகி விட்டார். எனவே ரஜினியில் 173வது படத்தை யார் இயக்குவார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இதற்கிடையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன், ரஜினிக்கு பிடித்த கதையைதான் எடுப்போன் என்றார். மேலும், ரஜினியின் படத்தை இயக்க புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ரஜினியின் 173 வது படத்தை தனுஷ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
தற்போது தலைவர் 173 படத்தை இயக்குவது தொடர்பாக தனுஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. தனுஷ் “பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லி கடை” போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




