தன்னம்பிக்கை உச்சத்தில் இருக்கும் நாள்…இன்றைய ராசிபலன் – 11.02.2026

0
20

மேஷம்

இன்று மனக்குழப்பம் நிறைந்த நாளாக மூல நட்சத்திரக்காரர்களுக்கு இருக்கும். காரணம் தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை

ரிஷபம்

சொத்து, வீடு, வாகனம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களுடன் இனிமையான உரையாடல் நடைபெறும். தொழிலில் இருந்த தடைகள் படிப்படியாக விலகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்த அளவில் இருக்கும். பழைய கடன்கள் குறித்து நல்ல தீர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

மிதுனம்

பொறுமையும் தெளிவான சிந்தனையும் உங்களுக்கு வெற்றியைத் தரும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். தொழிலில் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உடல்நலம் சீராக இருக்கும். தெய்வ வழிபாடு மன உறுதியை அதிகரிக்கும். இன்று நிதானமாக செயல்பட்டால் அனைத்தும் உங்கள் பக்க பலமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கடகம்

இன்று எதிர்பார்த்த இடங்களில் இருந்து ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும், உங்கள் நேர்மையான பேச்சால் சுமூகமாக தீரும். தொழிலில் புதிய யோசனைகள் மனதில் தோன்றி செயல்படுத்தும் ஆவல் ஏற்படும். மேலதிகாரிகளின் கவனம் உங்கள் மீது விழும். இன்று உங்களின் தன்னம்பிக்கை உச்சத்தில் இருக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

சிம்மம்

இன்று பணவரவு மிதமான அளவில் இருந்தாலும் தேவைகளை பூர்த்தி செய்யும் நாளாக அமையும். வீண் செலவுகளை தவிர்த்தால் சேமிப்பு உயரும். நண்பர்கள் மூலம் நல்ல செய்தி வரும். உடல்நலத்தில் சிறிய சோர்வு உணர்வு ஏற்படலாம்; ஓய்வு அவசியம். ஆன்மீக சிந்தனை மனஅமைதியை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கன்னி

தகவல் பரிமாற்றம், பேச்சு, எழுத்து போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு சிறந்த நாளாக அமையும். புதிய அறிமுகங்கள் உங்களுக்கு பயனளிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். தொழிலில் இருந்த குழப்ப நிலை தெளிவடையும். திட்டமிட்டு செயல்பட்டால் முன்னேற்றம் நிச்சயம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

துலாம்

பணவரவு சீராக இருக்கும். பயணம் சாதகமாக அமையும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத் தலைவிகள் குடும்ப பொறுப்பினை உணர்ந்து நடப்பர். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். உடல்நலத்தில் சிறு அலட்சியம் கூடாது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

விருச்சிகம்

உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் மூத்தவர்களின் ஆலோசனை பயனளிக்கும். தொழிலில் பொறுப்புகள் அதிகரித்தாலும், அதை திறம்பட சமாளிப்பீர்கள். பணவரவு மெதுவாக உயரத் தொடங்கும். வீண் செலவுகளை குறைத்தால் நிம்மதி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

தனுசு

மன அழுத்தம் சிறிது தோன்றலாம்; தியானம் உதவும். உறவினர்களுடன் நல்லுறவு வலுப்படும். உடல்நலத்தில் கவனம் தேவை. ஆன்மீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பொறுமையுடன் செயல்படுவீர்கள். இன்று வெற்றிக்கான சில திட்டங்களை தீட்டுவீர்கள். காதல் கசக்கும். தம்பதிகள் ஒற்றுமையுடன் செயல்படுவர்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

மகரம்

உங்கள் தலைமைத் திறன் வெளிப்படும் நாள். சமூகத்தில் மதிப்பு உயரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மேலதிகாரிகளின் பாராட்டு மன உற்சாகத்தை தரும். பணவரவு நல்ல நிலையில் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கும்பம்

நண்பர்கள் வட்டாரம் விரிவடையும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு கூடும். மேலதிகாரிகள் தங்கள் ஆலோசனைப்படி நடப்பர். உடல்நலம் சீராக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தன்னம்பிக்கை உங்கள் வெற்றிக்கு காரணமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்

மீனம்

திட்டமிடல் மற்றும் ஒழுங்கு உங்கள் பலமாக இருக்கும். வேலைகளில் சிறு தாமதம் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாக அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். செலவுகளில் கவனம் தேவை. உடல்நலம் சிறப்பாக இருக்கும். நினைத்த ஒரு காரியம் இனிதே முடியும். கனவு பலிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here