உயர்தர பரீட்சை வெளியாகி இருக்கும் இந்நிலையில் கேம்பிரிஜ் பாடசாலையின் ரவிச்சந்திரன் ஸ்ரீதேவி வரலாற்று சாதனையாக கலைப்பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாமிடத்தை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் வாழும் பிரதேசத்திற்கும் பெருமைத்தேடி தந்துள்ளார்.
குறித்த மாணவி கலைப்பிரிவில் தமிழ்,புவியியல், அரசறிவியல் எனும் மூன்று பாடங்களை தெரிவு செய்ததோடு தான் தெரிவு செய்த மூன்று பாடங்களிலும் 3 அதி திறமை சித்தியை பெற்று மாவட்ட ரீதியில் முதலாமிடத்தையும் தேசிய ரீதியில் 62ம் இடத்தையும் பெற்று கேம்ரிஜ் பாடசாலைக்கு பெருமையை தேடித்தந்துள்ளார்.அம்மாணவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
நீலமேகம் பிரசாந்த்