தனது பிறந்த தினத்தை முன்னிட்டு பலர் பல வேலைகளை செய்து வருகின்றனர்.அந்தவரிசையில் மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினரான ராஜ் அசோக் தன் பிறந்த தினத்தை முன்னிட்டு பல வருடமாக கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இரு பஸ் தரிப்பிடங்களை அழகுப்படுத்தினார்.
அந்தவகையில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட கங்கேவத்த எனுமிடத்தில் கவனிப்பாரற்று கிடந்த பஸ்தரிப்பிடத்தை அப்பிரதேச மக்கள் ராஜ் அசோகின் கவனத்திற்கு கொண்டு செல்ல உடனே தன் மஸ்கெலியா பிரதேச சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் அப் பஸ் தரிப்பிடத்தை அழகுப்படுத்தினார்.
அதேபோல பிரவுன்லோ 56 பகுதிக்குறிய பஸ் தரிப்பிடமும் கவனிப்பாரற்றுகிடக்க தன் பிறந்த தினத்தை முன்னிட்டு மக்கள் கேட்டுக்கொண்ட இரு பஸ் தரிப்பிடங்களையும் தன் பிறந்த தினத்தை முன்னிட்டு வர்ணப்பூச்சுகளால் அழகுப்படுத்தினார்.
இவ் வேலைத்திட்டத்தில் இளைஞர்களின் பங்களிப்பும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
: நீலமேகம் பிரசாந்த்