தபால் துறைக்குள் மோசடி; தபால் மா அதிபர் குற்றசாட்டு

0
42

தபால் மா அதிபர் ஜெனரல் ருவன் சத்குமார, தபால் துறைக்குள் காணப்படும் மோசடி மற்றும் திறமையின்மை தொடர்பான பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

அதிகாரிகளின் இத்தகைய தவறான நடத்தை காரணமாக தான் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக தபால் தினத்தை முன்னிட்டு ஹப்புத்தளை அஞ்சல் நிலையத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய சத்குமார, முறையான கைரேகை பதிவுகள் இன்றி மேலதிக நேரக் கொடுப்பனவுகளாக மில்லியன் கணக்கான ரூபாய் மோசடியாகக் கோரப்பட்டுள்ளதாகக் கூறினார்.

சில ஊழியர்கள் வாகன சேவைக்காக மேலதிக நேர ஊதியம் கோரியுள்ளனர், பெரும்பாலும் தேவையானதை விட அதிகமான தொழிலாளர்களைப் பட்டியலிடுகின்றனர் அத்துடன் வேலை செய்யும் நேரத்தை அதிகப்படுத்துகின்றனர் என்று அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

கொழும்பில் உள்ள உயர்கல்வி அமைச்சகத்திற்கு பிலிமத்தலாவையிலிருந்து அனுப்பப்பட்ட கடிதம் அதன் இலக்கை அடைய கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனது என்ற சமீபத்திய சம்பவத்தை மேற்கோள் காட்டி, அஞ்சல் விநியோகத்தில் ஏற்பட்ட தாமதங்களையும் அவர் விமர்சித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here