தமிழகத்தில் கோரத் தாண்டவம் ஆடி வரும் மிக்ஜாம் புயல்!

0
181

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சென்னைக்கு, 150 கி.மீ. தொலைவில் கிழக்கு – தென்கிழக்கில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அதிக அளவிளான கனமழை மற்றும் அதிக வேகத்தில் காற்று வீசி வருகிறது. கடும் புயல், மழை காரணமாக வெள்ள அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.தொடருந்து நிலையங்கள், சாலைகள் மற்றும் சென்னை விமான நிலையம் உள்ளிட்டவை வெள்ள நீரால் மூழ்கியுள்ளன.

இதேவேளை, மழை காரணமாக சென்னையில் புறநகர் தொடருந்துகள் இன்று நாள் முழுவதும் இரத்துச் செய்யபட்டுள்ளது, மேலும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சிறப்பு தொடருந்துகளாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புயல் காரணமாக தமிழகம் முழுவதும் இதுவரை 120 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பலத்த காற்று காரணமாக மரங்கள் ஆங்காங்கே விழுந்துள்ள நிலையில் இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டிற்கு பாதுகாப்பாக இருக்கும்படி அறிவிறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வேளச்சேரியில் அடிக்குமாடி கட்டம் ஒன்று தரையில் இறங்கியதாக கூறப்படுகிறது. பலர் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்த நிலையில், விபத்து ஏற்பட்ட இடத்திற்கு தீயணைப்புப்படை வீரர்கள் சென்று இருவரை மீட்டுள்ளதுடன் மீட்பு பணிகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here