முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (21) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டார்.
இன்று காலை 8.40 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-121 இல் இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்ரி விக்கிரமசிங்கவும் இந்ப் பயணத்தில் இணைந்துள்ளார்.
இதேவேளை, தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைவதற்காக எதிர்க்கட்சிகளால் இன்று நுகேகொடையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பேரணிக்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.




