தமிழகத்தின் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களை நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைலருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் தலைமையிலான குழு ஆரம்ப கைத்தொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் சந்தித்து கலந்துரையாடியது
இந் நிகழ்வில் இ.தொ.காவின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், ஆரம்ப கைதொழில் பிரதி அமைச்சர் முத்துசிவலிங்ம், மத்திய மாகாண விவசாய அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன், ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் இ.தொ.காவின் உப தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான மதியுகராஜா, உதவிப் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தேசிய அமைப்பாளர் ரரஜதுரை,பிரதி தேசிய அமைப்பாளர் சிவஞானம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், இலங்கை இந்தியப் பேரவையின் உறுப்பினர்கள் இ.தொ.காவின் முக்கியஸ்தர்கள், எனப் பலரும் கலந்துக் கொண்டனர்.