தமிழில் பேசிய மாணவன் மீது ஆசிரியை கொலைவெறி தாக்குதல் : கிழிந்தது செவிப்பறை

0
132

தமிழில் மாணவன் பேசியதை கேட்டு ஆத்திரமடைந்த ஆசிரியை மாணவன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை ராயபுரத்தில் இயங்கி வரும் தனியார் பாடசாலையிலேயே இந்த மோசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.இந்த நிலையில், இந்தப்பாடசாலையில் ஐந்தாம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை நாயகி என்பவர், அந்த வகுப்பைச் சேர்ந்த மாணவன் தமிழில் பேசியதால் ஆத்திரமடைந்து அவரது காதைப் பிடித்துத் திரிகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதில், மாணவனின் காது சதை கிழிந்து அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவனை தாக்கியதாக தனியார் பள்ளி ஆசிரியை மீது ராயபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here