தமிழகத்தில் மிக்ஜாம் புயல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் அதிலிருந்து மக்கள் மெல்ல மீண்டு வருகின்றனர்.இந்நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.