தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு: சபையில் கோரிக்கை முன்வைப்பு!

0
3

 

” பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலம்  சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்.”

இவ்வாறு நீதி அமைச்சரிடம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

” பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க அவதானிக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் குறிப்பிடுவது வரவேற்கத்தக்கது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கதிர்காமதம்பி சிவகுமார், விக்னேஸ்வரநாதன்  பார்த்திபன், கிருஷ்ணசாமி ராமசந்திரன், சண்முகலிங்கம் சூரியகுமார், ஜோன்ஷன் கொலின் லெவன்டினோ, சச்சிதானந்தம் ஆனந்த சுதாகர், ஏ.எச். உமர் காதர், தங்கவேலு விமலன், செல்வராஜா கிருபாகரன் மற்றும் தம்பியையா பிரகாஷ் ஆகியோர் 14 முதல்  30 ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களின் குடும்பத்தை கருத்திற்கொள்ளுங்கள், ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் பெற்றோர் இல்லாமல் வாழ்கிறார்கள். அந்த பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் கரிசனை கொள்ளுங்கள்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்ட காலம்  சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்பதை இந்த உயரிய சபை ஊடாக  வலியுறுத்துகிறேன்.” என சிறிதரன் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here