தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாட மலையக மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்த புத்தாண்டை முன்னிட்டு புத்தாடை மற்றும் அத்தியாவசிய பொருட்கள், பட்டாசு உள்ளிட்ட பல பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் மலையக நகரங்களை நோக்கி வருகை தந்தருந்தனர் இதனால் கண்டி, கம்பளை, நாவலப்பிட்டி, ஹட்டன், தலவாக்கலை உள்ளிட்ட பிரதான நகரங்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வருகை தந்தருந்தனர். இதனால் கண்டி போன்ற நகரங்களில் சன நெரிசல் காணப்பட்டது
கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா மற்றும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக சித்திரை புத்தாண்டு கலையிழந்து காணப்பட்டது இந் நிலையில் இவ்வருடம் நாடு வழமைக்கு திரும்பி வரும் நிலையில் புத்தாண்டை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்
இதேவேளை புத்தாண்டை முன்னிட்டு மலையக பகுதிகளில் உள்ள பஸ் டிப்போகளில் புதிய பஸ்களும் சேவையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது