வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று நேற்று (10) மீன்பிடி வலையில் சிக்கி கண்டெடுக்கப்பட்டதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராஜாங்கனய குளத்தில் இருந்து யாய ஹதர பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் வழங்கும் பிரதான நீர்ப்பாசன கால்வாயில், காலை முதல் இரண்டு மணி நேரம் மீன்பிடித்தபோது, வலையில் ஏதோ சிக்கியதை கவனித்த மீனவர்கள், அது கைக்குண்டு என சந்தேகித்து 119 அவசர எண்ணுக்கு அறிவித்திருந்தனர்.
உடனடியாக தம்புத்தேகம பொலிஸார் அனுராதபுரத்தில் உள்ள உலுக்குளும பொலிஸ் சிறப்புப் படையின் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவை அழைத்துள்ளனர்.
சம்பவ இடத்தை ஆய்வு செய்த சிறப்புப் படை, அது கைக்குண்டு என்பதை உறுதிப்படுத்தி, அதை இராஜாங்கனய யாய துன், “லுனுஓயா”வின் வெறிச்சோடிய பகுதிக்கு கொண்டு சென்று செயலிழக்கச் செய்துள்ளனர்.
பிரதான பாதையுடன் இணைந்த இந்த கால்வாயில் குண்டு வெடித்திருந்தால், உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் கூறிப்பிட்டுள்ளனர். இந்த கைக்குண்டு சில நாட்களுக்கு முன்பு கால்வாயில் வீசப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.