தரமற்ற மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் மீட்பு – உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை!

0
68

உரிய ஆவணங்கள் இன்றி தரமற்ற மருந்துகள் மற்றும் சருமத்தை வெண்மையாக்கும் பொருட்கள் என்பவற்றை விற்பனை செய்த அழகுசாதனப் பொருட்கள் விற்பனை நிலையமொன்று நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் சோதனைக்குட்படுத்தபட்டது.

புறக்கோட்டை கதிரேசன் வீதியில் உள்ள விற்பனை நிலையமொன்றே நேற்றையதினம் இவ்வாறு சோதனைக்குட்படுத்தபட்டது.

இதன்போது சட்டவிரோதமாக மருந்துகள் மற்றும் சருமத்தை வெண்மையாக்கும் கிறீம் வகைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த மருந்து பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் என்பன அதிகாரிகளால் எடுத்தது செல்லப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக எதிர்காலத்தில் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here