வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் பெரும்பாலான மாணவர்கள் சிறந்த பெறும்பேற்றுகளை பெற்றுள்ளனர். மலையகத்தை சேர்ந்த பெரும்பாலான பாடசாலைகளில் சிறந்த பெறுபேற்றை மாணவர்கள் பெற்றுள்ளனர். கொவிட் பெருந்தொற்றுக்கு மத்தியில் சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ள மாணவர்களுக்கும், இப்பரீட்சையில் ஆர்வத்துடன் தோற்றிய மாணவ்ர்களுக்கும் இ.தொ.காவின் உபதலைவரும்,பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு முழுவதும் கொவிட் பெருந்தாற்றால் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. பெரும் நெருக்கடிக்கு மத்தியில்தான் மாணவர்கள் கல்வியை கற்றனர். அவர்களுக்கு கற்பித்தல் செயற்பாட்டை மேற்கொண்டிருந்த ஆசிரியர்களும் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தனர்.
பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியும் மாணவர் சமூகம் இம்முறை சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளமைக்காக எனது பாராட்டை தெரிவிப்பதுடன், ஆசிரியர் சமூகத்துக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் இப்பரீட்சியில் தோற்று வெற்றிப் பெறாத மாணவர்களுக்கு இது முடிவல்ல ஆரம்பம் எனவே இனிமேல் எதிர்க்கொள்ளும் ஏனைய பரீட்சைகளை சிறப்பாக எதிர்க்கொள்ள வேண்டும் என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.