தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 06 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு செய்து, அவற்றை 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
சர்ச்சைக்குரிய 6 ஆம் தர ஆங்கிலக் கற்றல் தொகுதி (Module) தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் தேசிய கல்வி நிறுவனம் நடத்திய விசாரணை அறிக்கைகளின் முடிவுகளுக்கமைய அதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளுக்கு எதிராக தேசிய கல்வி நிறுவனத்தின் நிருவாக சபை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
எவ்வாறாயினும், முதலாம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்கள் எவ்வித மாற்றமுமின்றி முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.




