ஸ்ரீ தலதா மாளிகையைச் சுற்றியுள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை முறையான அனுமதியின்றி ட்ரோன் மூலம் படம்பிடித்ததாகக் கூறப்படும் சீனப் பிரஜை ஒருவரை ஸ்ரீ தலதா மாளிகை காவல் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு (15) சுமார் 7.00 மணியளவில் தியவடன நிலமேவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகிலிருந்து 48 வயதான சீனப் பிரஜை இந்தக் காணொளியை எடுத்ததாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஸ்ரீ தலதா மாளிகையின் மீது பறந்து கொண்டிருந்த ட்ரோன், ஜாமர் கருவிகளைப் பயன்படுத்தி விமானப்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
மேலும் தலதா மாளிகை காவல்துறையினர் சீனப் பிரஜையையும், ட்ரோனையும் மேலதிக விசாரணைக்காக கண்டி சுற்றுலா காவல் பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.